நெடுஞ்சாலை துறையில் 181 பேருக்கு பணி நியமன ஆணை- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min read
M.K.Stalin issued the appointment order for 181 people in the highway department
8.8.2022
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப்பணிகள் தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.