May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பாட்டுபோட்டியில் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram caught in a singing competition/ comedy story/ Tabasukumar

18.8.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும் வழியில் திருச்சியில் பஸ்நின்றபோது டிபன்சாப்பிட்டுவிட்டு பஸ்ஏறவந்தபோது சுடிதார்சுதா கைகுலுக்க அதை ஒருவாலிபர்படமெடுக்க ஒரேபரபரப்பானது. சுடிதார் சுதாவிடம் கண்ணாயிரம் கையைபிடிச்சி இழுத்தியா என்று பூங்கொடி கேட்க சுடிதார் சுதாவோ நான் பலரது கையைபிடித்தேன்.. நான் கையை பிடித்தவர்கள் கையில் சந்தனவாசம் வீசும் என்று பிட்டை போட்டுவிட அனைவரும் தங்கள் கணவரின் கையில் சந்தனவாசம் வீசுதா என்று சோதனை செய்ய இறுதியில் சுடிதார் சுதா தமாசுக்கு பொய்சொன்னதாக சொல்ல..அங்கு சிரிப்பலை எழுந்தது.
சந்தனவாசம் வீசவில்லை என்பது உறுதியான வேளையில் சந்தனம் மணக்குது..
கற்பூரம் ஜொலிக்குது என்றபக்திபாடல் ஒலிக்க…கண்ணாயிரம்
ஒன்றும்புரியாமல் விழிக்க..பூங்கொடி கண்ணாயிரத்தை பார்க்க..பாடல் பக்தி முழக்கத்துடன் ஒலித்தது.
பஸ் வேகமாக திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு பாய்ந்து செல்ல அடுத்ததாக…அன்னையே வேளாங்கன்னியே…என்ற பாடல் ஒலிக்க அனைவரும் அமைதியாக கேட்டவண்ணமிருக்க…அந்த பாடல் முடிந்ததும்..
அல்லா…அல்லா…
நீ இல்லாத இடமே இல்லை..
அல்லா….அல்லா..
என்றபாடல் ஒலித்தது..
கண்ணாயிரம் மெய்மறந்து பாடல் காட்சியை பார்த்த வண்ணமிருக்க…பக்தி பாடல்கள் முடிந்து தத்துவ பாடல்கள் ஒலிக்க தொடங்கியது..
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா..என்ற பாடலை கேட்டதும் வாலிபர்கள்..நிறுத்து..நிறுத்து ஜாலியா..காதல்பாட்டு போடு என்று கத்த…உதவி டிரைவர் எழுந்து வேறு கேசட்டை போட்டுவிட்டார்….
ராத்திரி நேரத்து பூஜையில்…என்ற பாடல் ஒலித்ததும் வாலிபர்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர்.கண்ணாயிரம் ரசித்து கேட்க பூங்கொடி முறைத்ததும் கண்ணாயிரம்..பாடல்கள் பிடிக்காததுபோல் காதுகளை இறுக்கி பொத்திக்கொண்டார்.
அந்த பாடல் முடிந்ததும்…
நேற்று ராத்திரி யம்மா…
தூக்கம் போச்சுது அம்மா…என்றபாடல் பல்வேறு முணங்கலூடன் தொடர..துபாய்க்காரர் எழுந்து…என்னப்பா பாட்டு போடுறீங்க…பெரியவங்க இருக்காங்கல்ல..நல்ல கருத்துள்ள பாடலை போடுங்கப்பா என்று சொல்ல…வாலிபர்கள் ஓ என்று கத்தினார்கள்..
இந்த நேரத்தில் கேசட்டு கோளாறாகி…நேற்று ராத்திரி அம்மா என்ற பாடலை எம்.ஆர்.ராதா குரலில் பல்வேறு கோணத்தில்பாட…அந்த சத்தத்தை கேட்க முடியாமல்..ஆ…என்று பெண்கள் காதை பொத்த வாலிபர்கள் ஏரிச்சலானார்கள்.
என்னடா இது..நல்ல நேரத்தில்வந்து இப்படி கழுத்தை அறுக்குது…பழைய கேசட்டுபோல…அதான்..இந்த இழு..இழுக்கு என்று அதை ஆப் செய்தனர்.
பின்னர் அந்த கேசட்டை எடுத்து பல்வேறு முதலுதவி சிகிச்சை செய்துவிட்டு…மீண்டும் அதே கேசட்டை போட்டனர்..அது..கீச்..மூச்..காச்…என்றுசத்தத்தூடன் கதவில் சிக்கிய எலிபோல்..கத்த..ச்சே..நல்ல பாட்டு…பாடமாட்டேங்குதே..என்று எரிச்சலூடன் ஆப் செய்துவிட்டு வேறு கேசட்டைபோட்டுவிட…
மன்மத ராஜா..மன்மத ராஜா..என்றபாடல் பட்டையை கிளப்பியது..வாலிபர்கள் துள்ளியாட இளம்பெண்கள் ரசித்தும் ரசிக்காததுபோல் இருந்தனர்..சுடிதார் சுதா வாலிபர்களுக்கு ஆதரவாக..போடு…போடு…அப்படி போடு..என்று கைக்கொட்டி ஆட..ஒரே அமர்களமாக இருந்தது.
அடுத்து…தம்பரதம்.தம்பரதம்..என்ற இந்திபாடல் ஓலிக்க..தமிழ்பாட்டு கேசட்டுக்கள் இந்திபாட்டு எப்படி நுழைஞ்சுது என்று கண்ணாயிரம் சிந்தித்த வேளையில்..வாலிபர்கள் அந்த பாடலுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஆட…சிலர் முகம் சுளித்தனர்.அந்த பாடல் நின்றதும்…அடுத்து..ஏக்தோ தீன் சார்பாஜனா…என்ற மற்றொரு இந்திபாடல் ஒலித்தபோது…என்ன இந்தி அதிகமா நுழைஞ்சிட்டே…என்னசெய்ய பாட்டு நல்லாத்தான் இருக்கு…என்னசொல்லுதுன்னு யாருக்கு தெரியும்…இசை ஆடவைக்குது..என்று யோசனையில் இருந்தபோது..சுடிதார் சுதா எழுந்து பஸ்சின் நடுபகுதிக்குவர வாலிபர்கள் கைகோர்த்தபடி ஆடினாள்.
பாடல்ஒருவழியாக நின்றபோது அடுத்து…சோலிகா பிச்சாகேயே…சோலிகே பிச்சாகேயே…என்ற பாடல் உற்சாகமாக ஒலிக்க..வாலிபர்கள் படுகுஜியாக…ஆட…கண்ணாயிரம் டென்சனாகி…ஏம்பா..ஒரே இந்திபாட்டா போடுறீங்க..கருத்துள்ள நல்ல தமிழ்பாட்டு போடுங்கப்பா..ஏன் இப்படி அவஸ்தை பண்ணுறீங்க என்று எழுந்து குரல் எழுப்ப. ஒரு வாலிபர் தன்செல்போனை தூக்கி கண்ணாயிரத்திடம் காட்ட…கண்ணாயிரம் கடுப்பாகி..அடபோங்கப்பா நல்லதை சொன்னா கேட்கமாட்டிங்க ..எக்கேடும் கெட்டுப்போங்க என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.
வாலிபர்கள் அதை கேட்பதாக இல்லை..மேலும் அதிகமாக ஆட்டம்போட…பஸ் ஒரு மேட்டில் ஏறி வேகமாக இறங்க..அப்போது ஏற்பட்ட குலுக்கலில்…கேசட்டு பாடுவதை நிறுத்தியது. வாலிபர்கள் டென்ஷனாகி..அங்கே இங்கே தட்டிக்கொடுத்துபார்த்தபோதும் டேப் ஓடமறுத்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட வாலிபர்கள்…அடச்சே..நம்ம மூட கெடுத்துடுச்சு…என்னய்யா டேப்புவச்சிருக்கிங்க…டப்பா…வெற்று டப்பா என்று கத்தினர்.உதவி டிரைவர் எழுந்துவந்து சரிபார்த்தபோதும் அது செயல்படமறுத்தது..சரி..டேப் இனிபாடாது..இனிநீங்களே பாடுங்க ..கேட்போம் என்று உதவி டிரைவர் சொல்ல வாலிபர்களும்..ம்..இதூம் நல்லாத்தான் இருக்கு என்று களத்தில் குதித்தனர்.
அன்பான சுற்றுலா பயணிகளே..உங்களுக்கு ஒரு இனிய போட்டி..ஒரு எழுத்தை சொல்லுவோம்..அந்த எழுத்தில் தொடங்கும் பாடலை நீங்க பாடலை பாடவேண்டும்..யார் அதிக பாட்டு பாடுகிறார்களோ அவர்களுக்கு பரிசு..முதலில் பெண்களுக்கான போட்டி..பா என்ற எழுத்தில் தொடங்கும் பாடல்..யார் பாடபோறீங்க..என்று ஒருவாலிபர் போட்டியை தொடங்கினார்.
உடனே சுடிதார்சுதா எழுந்து…பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடக தொல்லையோ…என்றபாடலை பாட..வாலிபர்கள் ரசித்து கேட்டனர். சுடிதார்சுதா..பஸ்சின் அனைத்து பகுதிக்கும்சென்று…கைகளை விரித்து லாவகமாக பாட..அனைவரும் மெய்மறந்து கேட்டனர்.
அந்த பாடல் நிறைவு பெற்றதும்..ப என்று தொடங்கும் பாடலை பாடலாம்..யார் பாட போகிறீர்கள் என்றுவாலிபர் கேட்க…சுடிதார்சுதாவே கையை தூக்க..சரிபாடுங்க..என்று வாலிபர் கட்டளையிட…சுடிதார்சுதா..பளிங்கினால் ஒருமாளிகை…
பருவத்தில் ஒரு கோபுரம்..
உன்னை அழைக்கிறேன் வா…என்று கண்ணாயிரத்தைபார்த்து பாட..நம்மளவம்புக்கு இழுக்காம…இருக்க முடியாது போல..வேற யாரையும் பாத்துபாட வேண்டியதுதானே..என்றபடி திரும்பிக்கொண்டார்.
வாலிபர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆட ஒரே சத்தமாக இருந்தது.இதை பார்த்த துபாய்க்காரர் ஏம்பா..ஒரே ஆளே பாடிக்கிட்டு இருந்தா எப்படி..எல்லோர் பெயரையும் சீட்டு குலுக்கி போடுங்க..யார் பேயருக்கு சீட்டுவருதோ.. அவங்க..அந்த எழுத்து பாடலை பாடட்டும் என்று சொல்ல வாலிபர்களும்…ஆமா..இது நல்லாத்தான இருக்கு..அப்படியே செய்வோம் என்று ஒரு டம்ளரில் அனைவரின்பெயரையும் எழுதிபோட்டனர். ஒரு சிறுமியை அழைத்து ஒரு சீட்டு எடுக்க சொன்னார்கள்..சிறுமி சீட்டு எடுத்து கொடுக்க அதை பிரித்துபார்த்தபோது பூங்கொடி பெயர்வந்தது. அதில் ம என்று தொடங்கும் பாடலை பாடுமாறு குறிப்பிட்டிருந்தது.. அதை கேட்டதும்..பூங்கொடி.பாடவராது..என்று பின்வாங்க….சும்மாபாடுங்க..நாங்க சொல்லித் தர்ரோம் என்று வாலிபர்கள் உற்சாகப்படுத்தினர்..மச்சானை பாத்திங்களா..என்று பாடுங்க என்றதும் பூங்கொடி உற்சாகமாகி..அந்தபாட்டா..அதான் நான் நல்லா பாடுவேனே என்றபடி சேலையை தூக்கிக்கட்டிக்கொண்டு
மச்சானை பாத்திங்களா..
மலைவாழ தோப்புக்குள்ளே…
குயிலக்கா சொல்லு..அவர்வந்தாரே
காணலய்யே…
என்று அசத்தலாக பாடி ஆட..வாலிபர்கள் தாளம்போட்டு ஆடினார்கள்.
கண்ணாயிரம் அந்த பாட்டில் உருகி..பூங்கொடி..நான் இங்கே இருக்கேன்..வேற எங்கும் தேடாதே என்று கத்த எல்லோரும் கொல் என்று சிரித்தனர். பூங்கொடியும் மேற்கொண்டுபாடமுடியாமல் சிரிக்க..கண்ணாயிரம் கைத்தட்டினார்.
சரி..அடுத்து யார்பாட போறாங்க..என்றபடி டம்ளரில் இருந்து மற்றொரு சீட்டு எடுத்து பிரித்துபார்க்க..அதில் கண்ணாயிரம் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் என்று தொடங்கும் பாடலை பாடுமாறு சொல்ல…கண்ணாயிரம்..நானா.பாட்டா..எனக்கு என்ன தெரியும்…பூங்கொடி..எனக்கு சொல்லிக்குடுமா என்று கெஞ்ச..பூங்கொடி கடுப்பாகி முட்டாள்..முட்டாள் என்று திட்ட..கண்ணாயிரத்துக்கு சந்திரபாபுபாடிய பாடல் நினைவுக்கு வர உற்சாகமாக பாடதொடங்கினார்..
நான் ஒரு முட்டாளுங்க..
ரொம்ப நல்லாபடிச்சவங்க..
நாலுபேரு சொன்னாங்க..என்று பாட..அனைவரும் சிரிக்க..கண்ணாயிரம் சிரித்துகொண்டு அடுத்தவரியைபாட..பூங்கொடி முறைக்க..கண்ணாயிரம்..அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்துபாட..கரகோஸம் கிளம்பியது.
ஆனால்..கண்ணாயிரம் நான் ஒரு முட்டாளுங்க..என்று பாடியதுபிடிக்காமல் பூங்கொடி நிறுத்துங்க என்று எழுந்து கத்தினார்.கண்ணாயிரம் ஆடிப்போனார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.