கண்ணாயிரத்தை மிரட்டிய சந்தனவாசம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Sandanavasam who threatened Kannayira/ comedy story/ Tabasukumar
11.8.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் திருச்சியில் பஸ்நின்றபோது டிபன் சாப்பிட்டுவிட்டு பஸ்சுக்கு வந்த போது மின்தடை ஏற்பட்டதால் இருட்டில்வந்த வேளையில் சுடிதார்சுதா அவரது கையை குலுக்க அந்த நேரத்தில் மின்சாரம் வர வாலிபர் ஒருவர் செல்போனில் படம்பிடித்தார். இதுமனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்று கண்ணாயிரம் நினைத்தவேளையில் சுடிதார்சுதாவுடன் கண்ணாயிரம் இருட்டில் பேசினார் என்று அந்தவாலிபர் பூங்கொடியிடம் போட்டுக்கொடுக்க கண்ணாயிரமோ அது இல்லை அது இல்லை என்று மறுக்க அந்த நேரத்தில் பஸ்சில் ஏறிவர அவளிடமே கேட்டுவிடுவோம் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் ஆடிப்போனார்.
சுடிதார் தளுக்கு நடையுடன் தன் இருக்கைக்கு செல்ல முயன்றபோது பூங்கொடி அவளை தடுத்து நிறுத்தி…ஏய் நில்லுடி…இருட்டில என்கணவர் கண்ணாயிரத்துடன் பேசினியா சொல்லு என்று கோபத்தில் கேட்க..அவளோ..நான் இருட்டிலே பலபேருடன் பேசினான். கண்ணாயிரத்துடன் பேசினேனான்னு சரியாக தெரியல என்றாள்.
உடனே பூங்கொடி
ஏய்..இருட்டில் உனக்கு என்ன பேச்சுவாழுது…என்று ஏச..சுடிதார்சுதா புன்னகைத்தபடி ஏங்க..பஸ்சுக்கு பக்கத்திலே பள்ளம் இருந்துச்சு. இருட்டில் சிலர் அது தெரியாமல் வழுக்கிவிழுந்தாங்க…அதனால நான் அந்தவழியாக வந்தவர்களை
கையைபிடிச்சு இழுத்து அந்தபக்கம் போகாதீங்கன்னு சொல்லி காப்பாத்துனேன்…இது தப்பா என்று கேட்டாள்.
அதற்கு பூங்கொடி…ஏய் ..கண்ணாயிரத்தை கையைபிடிச்சி இழுத்தியா..என்று கேட்க..சுடிதார்சுதா பதிலுக்கு என்ன கையைபிடிச்சி இழுத்தியா என்று கிண்டல் செய்ய பூங்கொடி…ஏய்..கதையை மாற்றாதே..கண்ணாயிரத்தை கையைபிடிச்சி இழுத்தியா என்று மீண்டும் கேட்க சுடிதார்சுதா நிதானமாக..இருட்டிலே யார கைபிடிச்சி இழுத்து காப்பாத்துனேன்னு தெரியல..ஆனா அப்போ நான் உள்ளங் கையிலே சந்தனம் பூசி இருந்தேன்..எனவே நான்கையைபிடிச்சி காப்பாத்துனவங்க கையிலே சந்தனவாசம்வரும்…அதைவச்சி கண்டுபிடிச்சிடலாம் என்றாள்.
அதை கேட்ட கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. பூங்கொடி சந்தேகத்துடன் கண்ணாயிரத்தை பார்க்க..கண்ணாயிரம் நான் இல்லை நான் இல்லை என்றபடி ஓடினார். ஒருவேளை கையில் சந்தனவாசம் வீசினால் என்ன ஆவது என்றபடி..தன் இருக்கையில்போய் அமர்ந்தார். பூங்கொடியும் ஓடிப்போய்..ஏங்க வலது கையை காட்டுங்க என்றபடி கண்ணாயிரத்தை மடக்கி அவரது வலது கையை மணத்துபார்க்க துடித்தார். கண்ணாயிரம் செல்லக்கோபத்துடன் கையுக்கும் சந்தனவாசம் உண்டா…யாரோ சொன்னா..நீ நம்புறியா விடு என்று சொல்லிப்பார்த்தார்.
ஆனால் கண்ணாயிரம் வலது கையை கொடுக்காமல் அங்கும் இங்கும் உருண்டபடி பிகு பண்ணினார்.
பூங்கொடி அவரது தலையில் செல்லமாக குட்டி..ஏங்க…சுடிதார்சுதா உங்ககையை குலுக்லன்னு சொன்னிங்கல்லா…ஆப்புறம் ஏன் கையைகொடுக்க மறுக்கிறீங்க…கையை கொடுங்க…நான்விடமாட்டேன் என்று சுற்றிவர கண்ணாயிரம்..அட..இது என்ன வம்பா போச்சு…என்று முணங்கினார்.
பூங்கொடி அவரது வலது கையை பிடிப்பதில் உறுதியாக இருக்க கண்ணாயிரம் கைகொடுக்காமல் ஏதோ சொல்லி சமாளிக்க நினைத்தார்.உடனே பூங்கொடி…ஏங்க..நீங்க கைய காட்டமாட்டேன்னு சொல்லுறதில் இருந்து சுடிதார்சுதா உங்ககையை குலுக்கி இருக்கிறா என்று உண்மையா தெரியுது…நீங்க மறைக்க பார்க்கிறீங்க..உங்கள எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன்..நீங்க இப்படி ஏமாத்துறியள…என்று சொல்ல கண்ணாயிரம் மனம் உருகி..ஏய்…இந்தா..என் வலது கைதானே வேணும்..நான் மணத்துபார்த்து சொல்கிறேன்..நீ ஏன் கஷ்டப்படுற என்று சொல்லியவாறு கண்ணாயிரம் தன் வலது கையை முகர்ந்து பார்த்தார். சந்தனவாசம் வீசவில்லை. மகிழ்ச்சி தாங்காத கண்ணாயிரம்.பூங்கொடியிடம்..நான்தான் சொன்னேன்ல..என்கையிலே சந்தனவாசம் வீசல என்று சொல்ல..நான் நம்பமாட்டேன்..எனனிடம் உங்க கையை கொடுங்க என்று சொல்ல கண்ணாயிரம் துணிச்சலாக தன்வலதுகையை நீட்டினார்.பூங்கொடி அந்த கையை பிடித்து முகர்ந்துபார்த்தபோது சந்தனவாசம் வராததால்…மகிழ்ச்சியுடன்…என் கணவர் கற்புக்கரசன்…அவர் கையில் சுடிதார் சுதாவின் சந்தனவாடை அடிக்கவில்லை…ஒவ்வொருத்தியும் அவுக புருசன் கையிலே சந்தனவாசம்வருதான்னு செக்பண்ணிக்கிடுங்க…என்றபடி..இருக்கையில் அமர்ந்தார்.கண்ணாயிரம் அப்பாட…தப்பிச்சேன்…என்ற முகத்தை துடைத்துக்கொண்டபோது…செல்போனில் படம் எடுத்த வாலிபர் கண்ணாயிரத்தை பார்த்து..செல்போனை காட்ட…இவன் வேற..நேரம் காலம் தெரியாமல் அவஸ்தை பண்ணுறான்..அதில இருக்கிற எல்லாம் அழிஞ்சு போக…என்று கண்ணாயிரம் சாபமிட்டார்.
இந்த நேரத்தில் கணவன் மேல் சந்தேகம் அடைந்த பெண்கள் எல்லாம்…தங்கள் கணவனின் வலது கையைபிடித்து முகர்ந்துபார்க்க..சந்தனவாசம் இல்லை என்று த தெரிந்து பெருமூச்சுவிட்டார்கள்.
யார்மாட்டப்போகிறார்களோ என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.இதைபார்த்த வாலிபர்கள்…சுடிதார்சுதாவிடம்..என்ன..என்று கேட்க அவள்…சும்மா பொய் சொன்னேன் என்று மெல்லிய குரலில்
சொல்ல அவர்கள் ..குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
சுடிதார் சுதா கண்ணாயிரத்தை பார்த்து..மயக்கமாக ஒரு புன்னகை சிந்தினார். கண்ணாயிரம் முகத்தை கையால் மூடிக்கொண்டு..என்னய்யா..எல்லாம் நம்ம சுத்தியே வருது..இந்த பயில்வான் சார எங்கே? .ஆளை காணம்..என்று நினைத்தபோது பயில்வான் பஸ்சில் ஏறி உள்ளேவந்தார். என்ன…எல்லோரும் வந்தாச்சா…பக்கத்து சீட்டில் உள்ளவங்க வந்திருக்காங்களான்னு பாருங்க…டைம் ஆயிட்டு..என்றபடி பஸ் இருக்கைகளை சுற்றிப்பார்த்தார். அனைவரும் வந்துவிட்டதை உணர்ந்த அவர்…சரி..எல்லோரும் வந்தாச்சு..ரைட்டு…பஸ் இனி மதுரையில்தான் நிக்கும்..இடையில் எங்கும் நிக்காது..என்று சொல்ல…வாலிபர்கள் எழுந்து..இது சரியில்ல…பஸ் மணப்பாறையில் நிக்கணும்..அங்கே நாங்க முறுக்கு சாப்பிடணூம் என்றனர்.
அதை கேட்ட பயில்வான்..ஏங்க..மணப்பாறை ரொம்ப தூரம்..அதிக கிலோ மீட்டர் சுற்றிப்போகணும்..ஏற்கனவே கண்ணாயிரம் அல்வா சாப்பிடுறதுக்காக நெல்லை போயி குற்றாலம் போகணு முன்னு சொல்லுறாரு…நீங்க வேற மணப்பாறை போகணுமுன்னு சொல்லுறீய..அது சரிப்பட்டுவராது என்றார்.
உடனே வாலிபர்கள் …சுடிதார்சுதா மணப்பாறை முறுக்கு சாப்பிட ஆசைப்பட்டுவிட்டார்..அதனால..மணப்பாறை போயியே ஆகணும் என்று கோஷமிட்டனர்.
உடனே பயில்வான்..ஏங்க..மணப்பாறை முறுக்க..மணப்பாறைபோயிதான் சாப்பிடணுமா..திருச்சியிலே கடையிலே மணப்பாறை முறுக்குவாங்கலாமே..எதுக்கு வம்பா மணப்பாறை போகணும் என்று கேட்க வாலிபர்களோ..நெல்லை அல்வாவை..மதுரையிலே வாங்கலாமே…ஏன் நெல்லைக்கு போகணும்…கண்ணாயிரத்துக்கு ஓரு நீதி..சுடிதார்சுதாவுக்கு ஒரு நீதியா என்று போர்ககுரல் எழுப்பினர்.அதை கேட்ட பயில்வான்…ஏங்க..ஒரு முறுக்குக்காக மணப்பாறைபோகணுமா..அதிகம் செலவாகுமே..ஒரு ஓட்டேடுப்பு நடத்துவோம்..சுடிதார்சுதா கேட்ட முறுக்குக்கா மணப்பாறை போகணுமுன்னு யாரெல்லாம் சொல்லுறீங்களோ..அவங்கெல்லாம் கைதூக்குங்க
என்று சொல்ல…வாலிபர்கள் மட்டும் கைதூக்கினார்கள்.
கண்ணாயிரம்கையை தூக்காமல் இருப்பதை பார்த்த வாலிபர்..செல்போனை காட்டி கண்ணாயிரத்தை மிரட்ட…கண்ணாயிரம் பயந்துபோய் பாதி அளவு கைதூக்கினார்.
சுடிதார்சுதா முறைக்க…கண்ணாயிரம் நான் ஆதரவும் இல்லை..எதிர்ப்பும் இல்லை.நடுநிலைமை…எப்படி நம்மதிட்டம் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.
இதைபார்த்த பயில்வான் மணப்பாறைக்கு போக ஆதரவு கம்மியா இருக்கு..கண்ணாயிரம்கூட நடுநிலைவகிக்கிறாரு..
நெல்லைக்கு போக யார்எல்லாம் ஆதரவு கைதூக்குங்க என்று சொல்ல…கண்ணாயிரம் உள்பட ஏராளமானோர் கைதூக்கினார்கள்.
சுடிதார்சுதாவும் ஆதரவாக கைதூக்க..கண்ணாயிரம் ஆச்சரியத்துடன் பார்த்தார். என்னதான் இருந்தாலும்…அவளும் பெண்தானே..நமக்கு ஆதரவாக கைதூக்கிவிட்டாள் என்று மனம் மகிழ்ந்தார். அதைப்பார்த்த பூங்கொடி என்னங்க…உங்களுக்கு ஆதரவாக சுடிதார்சுதா கைதூக்கிறா..என்ன நடக்கு இங்க என்று திட்ட கண்ணாயிரம் அசடுவழிந்தபடி நெல்லை அல்வா பிடிச்சிருக்கும்..வேறமாதிரி நினைக்காதே என்று சமாளித்தார். இவைகளை பார்த்த பயில்வான்..வாலிபர்களே..மணப்பாறைக்கு போகணுமுன்னு நீங்கமட்டும்தான் சொல்லுறுங்க..அப்படிபோனா செலவு அதிகமாகும்..அதுக்கு யார்பொறுப்பேற்பது என்று கேட்க…வாலிபர்களோ..சுடிதார்சுதாவுக்காக நாங்களே அந்த செலவை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல பயில்வான் ரைட்டு…மணப்பாறை போகலாம்….டிரைவர்…வாலிபர்கள் கோரிக்கைபடி..மணப்பாறை போயி மதுரை போங்க என்றார்.
சுடிதார்சுதாவுக்காக என்றவுடன் டிரைவரும் சிரித்தபடி ரைட்டு என்றபடி…பஸ்சை இயக்கதயாரானார். கண்ணாயிரம் மகிழ்ச்சியில் டிரைவர்சார்..நல்லபாட்டுபோடுங்க என்க…ஒருபக்திபாட்டு ஒலித்தது..அந்தபாட்டு..
.
சந்தனம் மணக்குது…கற்பூரம் ஜொலிக்குது….என்று முழங்கியது..சந்தனம் மணக்குது என்றவார்த்தையை கேட்டதும்..கண்ணாயிரம்என்னது..இப்பம்தான் சந்தனம்பிரச்சினை தீர்ந்துச்சு..மறுபடியுமா…என்று பயந்துபோய் இருந்தார்.
(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.