May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு

1 min read

DMK It has been 4 years since M.K.Stal took charge as the President

28.8.2022
திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5-ம் ஆண்டு தொடங்குகிறது.

தி.மு.க. தலைவர்

திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டு நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.