June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு திடீர் டெல்லி பயணம்

1 min read

Leader of Opposition Edappadi Palaniswami made a surprise visit to Delhi tonight

19.9.2022
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியது. அதேபோல் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது.
இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். 3 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *