August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

1 min read

Corona cases continue to increase in Tamil Nadu

25.9.2022
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா, தற்போது 10 நாட்களுக்கும் மேலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா, தற்போது 10 நாட்களுக்கும் மேலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 538 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 446 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *