May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பேராக குறைந்தது

1 min read

In India, the number of daily cases of corona virus decreased

27.9.2022
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு பேராக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 118 நாட்களில் பதிவான மிகக்குறைவான தினசரி கொரோனா பாதிப்பாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 37 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவ ரை கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 967 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.