October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: ஐகோர்ட் அனுமதி

1 min read

RSS rallies in 128 locations across Tamil Nadu: High Court grants permission

16/10/2-026
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. அந்த வகையில் வரும் 18-ம் தேதி அல்லது 25-ம் தேதி அல்லது நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்பில் டிஜிபியிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த விண்ணப்பம் தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்றும், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது’ என வாதிடப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில், ‘அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 3ஆம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதி. விழா காலத்தில் அனுமதி அளித்தால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்புக்கு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்படுவது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், விஜயதசமிக்கு முந்தைய நாளான அக். 25, நவ. 1 ஆகிய தேதிகளில், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டார்.

பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த கோர்ட் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருவதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக். 19-க்குள் இறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் அனுமதியை தொடர்ந்து தமிழகத்தில் 128 இடங்களில் அக்.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *