May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளுக்கு 3-ந் தேதியும் விடுமுறை

1 min read

3rd is also a holiday for Anna University Engineering Colleges

30.9.2022
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வருகிற 3-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1-ந் தேதி(இன்று) முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1-ம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் வருகிற 3-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 1-ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மூலம் ஆயுதபூஜை விடுறைக்கு சோந்த ஊர்களுக்கு படையெடுக்கு மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.