May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி ஏழுமலையானுக்கு அரிய வகை மலர்களால் மாலை, கிரீடம்

1 min read

A garland of rare flowers, a crown for the Tirupati Seven Hills.

3.10.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளான இன்று
ஏழுமலையானுக்கு அரிய வகை மலர்களால் மாலை, கிரீடம் அணிவிக்கப்பட்டது.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. இத்திருமஞ்சனத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால் தேன் தயிர் இளநீர் மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.

அரியவகை மலர்கள்

அபிஷேகத்திற்கு பின் அரிய வகை மலர்களால் செய்யப்பட்ட மாலை கிரீடம் அதேபோல் உலர்ந்த பழங்களால் செய்யப்பட்ட கிரீடம் மாலைகள் இந்த வருடம் புதிதாக தமிழக பக்தர்கள் அளிக்கப்பட்ட குங்குமப்பூ மாலை கிரீடம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.