June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறுவர்களுடன் ராகுல்காந்தி ஓட்டப்பந்தையம் விளையாடினார்

1 min read

Rahul Gandhi played jogging with the boys

30.10.2022
தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, சிறுவர்களுடன் ராகுல்காந்தி ஓட்டப்பந்தையம் விளையாடினார்.

ராகுல்காந்தி

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ‘இந்திய ஒற்றமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.3 நாட்கள் ஓய்வு கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கடந்த அக்., 23-ம் தேதி கர்நாடகாவில் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தது. தீபாவளி பண்டிகையொட்டி, யாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.
அதன்பின், கடந்த 27ந் தேதி மீண்டும் பாதயாத்திரை துவங்கியது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் காங்., எம்.பி., ராகுல்காந்தி ‘ பாரத் ஜோடோ யாத்திரை’ யாத்திரையை துவங்கினார். அவர், கொல்லப்பள்ளி முதல் சோலிபூர் வரை மேற்கொள்ள உள்ளார்.இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்டப்பந்தையம் விளையாடினார். முன்னதாக நடன கலைஞர்களுடன் ‘பதுகம்மா’ நடனமாடி ராகுல் காந்தி உற்சாகபடுத்தினார். காங்., எம்.பி ராகுல் ஒற்றுமை பயணம், தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள், 7 பார்லி., தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து வரும் நவ., 7ம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நவ., 4ம் தேதி யாத்திரைக்கு ஓய்வு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் யாத்திரையின் போது, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் ராகுல் சந்தித்து பேசுவார் என காங்., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *