June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை கன்னியாகுமரிக்கு இயக்கம்

1 min read

India’s longest train Vivek Express runs twice a week to Kanyakumari

19.11.2022
இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வருகிற நவம்பர் 22 முதல் வாரம் இருமுறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் எக்ஸ்பிரஸ்

அசாம் மாநிலம் திப்ருகர் நகரிலிருந்து கன்னியாகுமரிக்கு நாட்டின் மீக நீள ரெயிலான ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ அதிவேக ரெயில் வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 19 முதல் செயல்பட்டு வரும் இந்த திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், ஒன்பது மாநிலங்களை ஏறக்குறைய 4,189 கிமீ தூரத்தை 80 மணி நேர பயண நேரத்தில் கடந்து செல்கிறது.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 22 முதல் விவேக் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயக்கப்படும் என்று வடகிழக்கு எல்லை ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ரெயில் எண். 15906 (திப்ருகர் – கன்னியாகுமரி) விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இனி நவம்பர் 22 முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் கூடுதலாக இயக்கப்படும். மேலும் ரெயில் எண். 15905 (கன்னியாகுமரி – திப்ருகர்) விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இனி நவம்பர் 27 முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *