சிறார் காதல் ஹார்மோன் பிரச்சினை; குற்றச்செயல் அல்ல…”- ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் கருத்து
1 min read
Juvenile love hormone problem; Not a crime…” – High Court Judge PN Prakash opined
19.11.2022
சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார்.
பறவைத்திட்டம்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பறவை திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, பேருந்து படிக்கட்டு பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுவதை குறிப்பிட்ட அவர், நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
காதல்
காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை.
ஸ்டைலாக முடித்திருத்திக் கொள்ளும் மாணவர்களை பிடிக்கிறீர்கள், ஏன் நீங்களெல்லாம் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? எனவும் அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்து ஸ்டைல் காட்டியதில்லையா? எனவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.