June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு

1 min read

China decides to import Pizer vaccine

27.12.2022
சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி

சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன் குறைவாகவே இருந்தது. ஆனாலும் பிற தடுப்பூசிகளை சீனா செலுத்தவில்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், அந்த நாடு அமெரிக்க வேக்சின்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது.
இதனால் பெய்ஜிங் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாவுடன் வாழ பழக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சீனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வர உள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்கள் 5 நாட்கள் ஓட்டலிலும் 3 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *