நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது
1 min read
The budget session of Parliament will start on 31st
13.1.2023
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டம்
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மொத்த 27 அமர்வுகள் 67 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
ஆண்டில் முதல் கூட்டத் தொடரில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார்.
பட்ஜெட்
மேலும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகின்றது. இதன் பிறகு தொடங்கும் கூட்டத் தொடரில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.