June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சைப்ரஸ் நாட்டின் அதிபராக நிகோஸ் தேர்வு

1 min read

Nicos Elected President of Cyprus

13/2/2023
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. இதில் 51.9 சதவீத வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி பெற்றார்.

சைப்ரஸ்

சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் (49), 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு ஆகியன தேர்தலில் எதிரொலித்துள்ளது. சைப்ரசில் கிரேக்கம் பேசக்கூடிய தெற்கு பகுதி மற்றும் துருக்கியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதியில் அரை நூற்றாண்டாக காணப்படும் பிரிவினையும் தேர்தலில் எதிரொலித்துள்ளது.
இதையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சைப்ரஸ் விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *