July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பலி

1 min read

A worker was killed in an explosion at a firecracker factory near Vektianvilai

4.3.2023
திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பலியானார்.

பட்டாசு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை பார்த்த ஒரு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பட்டாசு ஆலையின் உரிமையாளர், தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். விபத்து நடந்தபோது ஒருவர் மட்டுமே வேலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *