June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதாவோடு யாருமே ஒப்பிடவில்லை – பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

1 min read

No one compares to Jayalalithaa – BJP leader Annamalai

8.3.2023
ஜெயலலிதாவோடு யாருமே ஒப்பிடவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒப்பிடவில்லை

பாஜகவை அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள். பாஜகவை மற்றொரு கட்சியிடனோ, கூட்டணி கட்சியிடனோ, ஆளுங்கட்சியிடனோ ஒப்பிடாதீர்கள். மற்ற கட்சியில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களுமே பெரும்பாலும் கட்சி வளர்ச்சியடைந்து ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதில் பலர் இணைந்துள்ளனர். ஆனால், பாஜக தொண்டன் அப்படி இல்லை. தமிழ்நாட்டில் பாஜக எப்போது ஆட்சிக்கு வரும் என்று தெரியாமல் தொண்டர்கள் உள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வருமா? ஆட்சிக்கு வர முடியுமா? அதற்கு நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் எப்போது தெரியும். 2024ஆ, 2026 ஆ, 2031 ஆ…என்று. அதில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். அதிமுகவில் உள்ள தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டால் அது சரியான ஒப்பீடு இல்லை.
எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. அது எப்படி இருக்குமென்று நேற்று நான் கூறிவிட்டேன். நான் எப்படி இருப்பேன் என்றும் கூறிவிட்டேன். நான் இப்படிதான் இருப்பேன் எதற்கும் மாறமாட்டேன். நான் தலைவராக இருக்கும்வரை பாஜக இப்படித்தான் இருக்கும்.

மாற்றம்

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக சில மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த இடத்திற்கு ( தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க) செல்ல முடியும். பேசுவது எளிது. எல்லா கட்சியும் வளர்ந்து வந்த விதம் வேறு பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் விதம் வேறு. நான் நேற்று கூறிய கருத்தில் இருந்து ஒரு படி முன்னேவும் செல்லப்போவது கிடையாது… பின்னேவும் செல்லப்போவது கிடையாது.
ஜெயலலிதாவோடு யாருமே ஒப்பிடவில்லை. எல்லோருமே தனித்தன்மை தான். ஒரு பழமொழி கூறிகிறேன். என் முன்னால் நடந்து சென்றால் நான் உங்களை பின் தொடரமாட்டேன். என் பின்னால் நடந்து வந்தால் உங்களை தலைமையேற்று அழைத்து செல்லமாட்டேன். என்னுடன் சேர்ந்து வாருங்கள் நாம் சேர்ந்து நடப்போம். யாரும் யாரையும் ஒப்படவில்லை. ஒவ்வொருவரும் தனித்தன்மை உள்ளது.
தமிழ்நாட்டில் 10 தலைவர்கள் அல்ல 8.50 கோடி பேரும் தலைவர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *