June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓடும் ரெயிலில் மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்

1 min read

Intoxicated ticket inspector urinates on female passenger in moving train

14.3.2023
டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் பரிசோதகர்

பஞ்சாப்பின் அம்ரித்சரில் இருந்து மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அம்ரித்சரை சேர்ந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார்.
இந்நிலையில், நள்ளிரவு ரெயிலில் மதுபோதையில் வந்த பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் ரெயில் இருக்கையில் உறங்கிக்கொண்டிருந்த ராஜேஷ்குமாரின் மனைவி மீது சிறுநீர் கழித்தார். டிக்கெட் பரிசோதகரின் இந்த இழி செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் விழித்து மதுபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை சிறைபிடித்தனர். பின்னர், உத்தரபிரதேசத்தின் சார்பஹ் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்த உடன் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் முன்னா குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *