June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அறுந்து விழுந்த மின்கம்யால் தொழிலாளி பரிதாப சாவு

1 min read

A worker died due to a falling power line

20.3.2023
குடியாத்தம் அருகே அறுந்து விழுந்த மின்கம்யால் தொழிலாளி பரிதாப இறந்தார்.

தொழிலாளி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 50) மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் செல்ல சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து சேருமண் பாதை வழியாக ஐதர்புரம் செல்ல சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். வேப்பூர் கிராமம் அருகே செல்லும்போது சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் சைக்கிள் இறங்கி சென்ற போது அந்த தண்ணீரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மரம் ஏறும் தொழிலாளி ஜீவா உயிர் இருந்தார்
அந்த வழியாக வந்தவர்கள் இதுபற்றி மின் அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்
ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காலையில் வேலைக்குச் சென்ற மரம் ஏறும் தொழிலாளி இருந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *