May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஷவரில் குளித்த கண்ணாயிரத்துக்கு வந்த சிக்கல்/ நகைச்சுவைகதை / தபசுகுமார்

1 min read

The problem that came to Kannayiram in the shower / comedy story / Tabasukumar

31.3.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் குளிக்கசென்றபோது அருவியில் வெள்ளம்வந்து இரண்டு பேர் இறந்த நிலையில் மேலும் இரண்டுபேரை தேடிவந்தபோது யாரும் குளிக்கக்கூடாது என்று போலீசார் விரட்டி அடித்தனர்.அப்போது காணாமல்போன கண்ணாயிரத்தை தேடி அவரது மனைவி பூங்கொடி குற்றாலம் போலீசில் புகார்செய்ய போலீசார் உடனே கண்ணாயிரத்தை கண்டுபிடித்துகொடுப்பவர்களுக்கு பரிசு என்று அறிவிக்க அந்த பரிசை வேறுயாரும் தட்டிச்செல்லக்கூடாது என்பதற்காக கண்ணாயிரம் ஓடிப்போய் போலீசில் சரண் அடைந்து பரிசை கேட்டார்.
இந்தநிலையில் அருவியில் தேடிவந்த மற்றோரு உடல் கிடைக்க கண்ணாயிரம் என்று குறியீடு எழுதப்பட்ட வேட்டியை கண்ணாயிரத்திடம் வாங்கிச்சென்ற போலீசார் அந்த உடலில் போர்த்த கண்ணாயிரத்தை தேடி அலைந்த பூங்கொடி இந்த குறியீடு உள்ள வேட்டியை பார்த்து பிணமாக இருப்பது கண்ணாயிரமோ என்று நினைத்து அழ… பின்னர் அது வேறு ஒருவர் உடல் என்று கண்டுபிடித்து கண்ணாயிரம் எப்படி வேட்டியை பறிகொடுத்தார் என்று கோபத்தில் போலீஸ்நிலையம் வந்தார்.
அங்கே அரைவேட்டியுடன் நின்ற கண்ணாயிரம் நிலைமை புரியாமல்..ஏ பூங்கொடி நான் எவ்வளவு நேரம் போலீஸ்நிலையத்தில் காத்திருக்கிறேன்..என்மேல் உனக்கு பாசம் இல்லையா என்று ஏச..பூங்கொடி கோபம்கொண்டு அவரை அடிக்கப்பாய கண்ணாயிரம் ஏட்டையா ரூமுக்குள் ஓடினார்.
ஏட்டைய்யா என்னமோ ஏதோ என்று பதறியபடி எழுந்துநிற்க கண்ணாயிரம் அவர்பின்னால் சென்று பதுங்க..பூங்கொடி ஆவேசமாக நின்றார்.
ஏட்டைய்யா பதட்டத்தை தணித்துக்கொண்டு ஏம்மா இவ்வளவு ஆவேசம்..அமைதி..அமைதி.. இவர் தன்பெயர் கண்ணாயிரமுன்னு சொல்லுறாரு..காணாமல் போன உங்கள் கணவர் இவர்தானா..என்று கேட்டார்.
ஆமா..இவரை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சிங்க…என்று பூங்கொடி கேட்க..எல்லாம் அந்த திருட்டுமொழிதான் என்று ஏட்டைய்யா சொல்ல கண்ணாயிரம் அதை பெருமையாக நினைத்து முழியை பலவிதமாக முழித்துகாட்டினார்.
அதைப்பார்த்து ஏட்டைய்யா சிரிக்க..கண்ணாயிரத்துக்கு வெட்கம் தாங்கவில்லை. உடனே ஏட்டைய்யா எழுந்து பூங்கொடியிடம்..அம்மா.. இந்த கண்ணாயிரத்தையே உங்கையிலே ஓப்படைக்கேன்..இதிலே ஆனந்த கண்ணீரைத்தான் இனி நான் பாக்கணும் என்று சொன்னார்.
பூங்கொடியும் நன்றி சொல்லிவிட்டு கண்ணாயிரத்தூடன் புறப்பட கண்ணாயிரமோ..ஏட்டய்யா பரிசு என்க..ஏட்டைய்யாவோ.. புகார்கொடுத்த உன்மனைவியிடமே கேள் என்று சொல்ல..கண்ணாயிரம் ம்..நீங்க தரமாட்டியளா..உங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு நானே ஓடிவந்து ஆஜரானேன்..அதுக்காவது பரிசு கொடுக்க வேண்டாமா..நான் ஆஜராகாமல் இருந்தா என்னை தேடிக்கிட்டுத்தான் இருந்திருப்பிய..பரிசு தராம ஏமாத்திட்டிய…ஆ..ஒண்ண மறந்துட்டேன்…என் வேட்டி..போலீஸ்காரர் வாங்கிட்டுபோன வேட்டியை கொண்டு தர்ரேன்னு சொன்னாரு…இன்னும் தரலையே..வேட்டி இல்லாம எப்படி போவேன்..என் மானம் என்னாவது..என்று சிணுங்கினார்.
அதைக்கேட்ட ஏட்டய்யா டென்சனாகி..ஐந்து எண்ணுறதுக்குள்ளே இந்த ஆளை கூட்டிட்டு போயிடும்மா..இல்லைன்னா அரை வேட்டியும் இருக்காது…போடா என்க…பூங்கொடி..ஏன்..வேட்டியா முக்கியம்..நீங்க உயிரோட கிடைச்சதே முக்கியம்..வாங்க…போயிடுவோம் என்று கண்ணாயிரத்தை இழுத்துக்கொண்டு போலீஸ்நிலையத்திலே இருந்து வெளியே வந்தார்.

கண்ணாயிரம் அரை வேட்டியுடன் தலை முடியை கோதிவிட்டவாறு வீரநடை நடந்து செல்ல பூங்கொடி அவர் பின்னால் சென்றார். கண்ணாயிரம் என் வேட்டி..என்வேட்டி என்க.. போலீஸ் ஒலிபெருக்கியில் காணாமல் போன கண்ணாயிரத்தை அரை மணி நேரத்தில் கண்டுபிடித்துகொடுத்த போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் பரிசு..என்று சொல்ல..பாத்தியா பூங்கொடி…நானா போயி ஆஜரானேன்.. எனக்கு பரிசுதராமல் போலீசாருக்கே பரிசாம் என்று சிணுங்கினார்.
மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு…அருவியிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரது உடலை அடையாளம் காட்ட உறவினர்கள் யாரும் வரவில்லை. அந்த உடலில் போர்த்தப்பட்ட வேட்டியில் கண்ணாயிரம் என்ற குறியீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று அறிவித்தனர்.
கண்ணாயிரம் உடனே..அது நான் இல்லை…அந்த பாடி போகும்போது நானும் பாத்தேன்..அய்யோ.. என்வேட்டி..என்வேட்டி என்று குதித்தார்.
பூங்கொடி அவரிடம் ஏங்க கத்தாதீங்க..அந்த வேட்டி இனி வேண்டாம்..வேட்டி வந்தா கூடவே ஆவியும் வந்துடும்..பிறகு கோடாங்கியை கூப்பிடணும்..பவுர்ணமி பூஜைவைக்கணும்..சேவக்கோழி வாங்கணும்.. பொங்கவைக்கணும்…அம்மாடி ஏற்கனவே பட்டது போதும் என்று சொல்ல கண்ணாயிரமும்..பவுரணமி பூஜையா..வேட்டியும் வேணாம்.. பூஜையும் வேணாம் என்று நடந்தார்.
குற்றாலத்துக்கு மெனக்கெட்டு வந்து குளிக்கலையே..என்று கண்ணாயிரம் புலம்ப..பேசாம வாங்க..ஓட்டலுக்கு போவோம்..அங்கே ஷவரிலே குளிங்க..குற்றாலத்து அருவி தண்ணிதான் ஷவரிலே வருது..என்றார்.
அப்படியா என்று கண்ணாயிரம் வாய்பிளக்க..ம்..யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க..அது ரகசியம்..வேறு யாருக்கும் தெரியாது என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் வாயை பொத்தியபடி ஓட்டலுக்குவந்தார்.
அறைக்குரிய சாவியை வாங்கி பூங்கொடி திறக்க கண்ணாயிரம் வேகமாக அறைக்குள் நுழைந்தார். ஏன் இந்த வேகம் என்று பூங்கொடி திட்ட..இது உனக்கு புரியாது பூங்கொடி.. அருவியிலே வெள்ளம். குளிக்கூடாது என்று சொல்லுறாங்க..அருவியிலே வருற தண்ணீதான் ஷவரிலே வருமுன்னு சொன்னா..அப்படின்னா ஷவரிலே வெள்ளம் வருமுன்னு தண்ணியை நிப்பாட்டிவிடக்கூடாதுல்லா..என்ன நான் சொல்லுறது என்றார்.
பூங்கொடியோ நாம் பொய்சொன்னா அதை நம்புறாரே..எப்படியும் குளிக்கட்டும் என்றுவிட்டுவிட்டார்.கண்ணாயிரம் விசில் அடித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரில் குளிக்க குழாயை திருக்க அது கையோடுவர பாத்ரூமுக்குள் ஒரே தண்ணி..அதை அடைக்கலாமுன்னு பாத்தா முடியல..ரூமுக்குள்ளும் தண்ணிவர…பூங்கொடி கோபத்துடன் கத்த…கண்ணாயிரம் ஒண்ணுமில்லம்மா..அருவியிலே வெள்ளமா..ஷவரை திறந்தவுடன் அவ்வளவு தண்ணியும் பாத்ரூமுக்குள்கொட்டோ கொட்டென்று கொட்டுது என்று சிரித்தார்.
பூங்கொடி ஆத்திரத்தில் கதவை திறங்க என்க.. கண்ணாயிரம்..கதவை திறந்தார்.அப்போது..(தொடரும்)
-வே.தபசுக்குமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.