திருநங்கைகளுக்கு தொடர்ந்து உதவுவோம்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
1 min read
Let’s continue to help transgenders – M.K.Stalin’s Twitter post
15.4.2023
“முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கி செயலாலும் திருநங்கைகளை பேணியவர் கலைஞர்! கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்.” என்று முதல் அமைச்சர் கூறியுள்ார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கி செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்! அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.