தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
1 min read
Tamil Nadu, Puducherry will experience dry weather for the next 5 days
15.4.2023
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வறண்ட வானிலை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.