June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

குருப்பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்

1 min read

Guru peyarchi Palankal 2023/ Rishabam/ Taurus

21.4.2021

பொறுமையும் நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்- கள். இதுவரை குருபகவான் 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதிய பதவியும், சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள்.இப்படி பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவான் கெடுபலனை செய்யும்போது அது உங்களுக்கு இறுதியில் நன்மையிலேயே முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவான் தண்டனை அமையும். மாணவனை ஆசிரியர் கண்டிப்பது நன்மைக்கே. அவர் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குரு வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
மேலும் கோச்சார அடிப்படையில் பலனை கணிக்கும் போது மற்றய முக்கிய கிரகங்களின் நிலையையும் கொண்டு ஆராய வேண்டும். அந்த வகையில் முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் தற்போது மகர ராசியில் இருப்பதால் உங்கள் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால் அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாகஉள்ளது. அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார் உங்கள் ஆற்றல் மேம்படும்.பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணை யாக இருப்பர்.இந்த நிலையில் சனி 20-12-2023 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். ஆனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம்.
ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப் -பார்.ஆனால்அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள்ராசிக்கு 6-இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்கள்ஆற்றல் மேம்படும்.முயற்சிகளில் வெற்றியை தருவார்.பகைவர்களின் சதியை முறியடி -க்கும் வல்லமையை பெறுவீர்கள்.8-10-2023 அன்று அவர் இடம் மாறி 11-ம் இடமான மீனத்திற்கு செல்கிறார்.அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
ராகுவுக்கு இணையான இன்னொரு கிரகம் கேது தற்போது 6-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும்.காரிய அனுகூலம் ஏற்படும்.அவர் 8-10-2023அன்று 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை.இந்த இடத்தில்அவர்அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான மீனத்தில் விழுகிறது. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
எந்த பிரச்சினை வந்தாலும் அதை கேது மற்றும் சனி பார்வையால் எளிதில் முறியடிப்பீர்கள். பொன், பொருள் கிடைக்கும். மேலும் கேதுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வையால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இதனால் பொருளாதார வளம் மேம்படும். எடுத்த எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். சிற்சில தடைகள் வந்தாலும் அதை தூசிபோல் துடைத்தெறிவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத்தான் செய்யும்.
உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும். புதிய வீடு-மனை வாகனம்வாங்குவதற்கான அனுகூலம் உண்டு
உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு -க்கு தடை ஏதும் இல்லை. சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிரு -க்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை. மருத்துவர்கள் கூடுதல் பலன்களை காணலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். வக்கீல்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தானே காரியத்தை சாதிக்கலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பணப்புழக் -கம் மிகஅதிகமாக இருக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.
கலைஞர்கள் சிறப்படைவர். பெண்கள் உங்களு -க்கு உறுதுணையாக இருப்பார். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பு பெறுவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழப்பம் இன்றி தெளிவாக இருப்பீர்கள். எந்த முடிவையும் தீர்க்கமாக எடுப்பீர்கள்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், கொள்ளு, துவரை, பழவகைகள் நல்ல வருவாயைக் கொடுக் -கும். கால்நடை செல்வம் பெருகும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பால் பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதியசொத்து வாங்க அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்; தனம்-மனம் நிறைவாக இருக்கும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றி -கரமாக செய்து முடிக்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். அண்டை வீட்டார்கள் உதவிகர -மாக இருப்பர். வேலையில் மன மகிழ்ச்சி ஏற்படும் உயர்ந்த பதவி கிடைக்கும். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.
உஷ்ணம், தோல், தொடர்பான நோய் முதலியன பூரண குணம் அடையும்.
பரிகாரம்- குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை செய்யலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலத்தில் ராகு சாதகமான நிலைக்கு வந்து நற்பலனை தருவார். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. ராகுவால் ஏற்பட்ட பணஇழப்பு,சிற்சில துயரசம்பவம், முயற்சி -களில் தடை ஏற்பட்ட, இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையேஅன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம் சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு -கள் மறையும்.11-9-2023 முதல்4-12-2023 வரை மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர்.
வியாபாரம் சிறப்படையும். கடந்த கால நஷ்டம் இருக்காது. ராகுவால் பண வரவு கூடும்.பகைவர்- களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அதிக வருமானத்தைக் காணலாம். கணினித் தொழில், பத்திரிகை இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு,பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார் -கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். சிலர் தீயோர்களின் சேர்க்கையால் அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பொதுநல சேவகர்களு -க்கு புகழ், பாராட்டு வரும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும். பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.
விவசாயிகள் நல்ல வளத்தைக் காணலாம். பூமியில் விளையும் அனைத்து பொருள்களும் நல்ல மகசூலைத் தரும். உளுந்து, எள், பனைபொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.11-9-2023 முதல் 4-12-2023 காரிய அனுகூலம் எளிதாகும். குடும்பத்தோடு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணம் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை காணாலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெண்களுக்கு குரு மன உளச்சலையும், சக ஊழியர்கள் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். இருப்பினும் குருவின் வக்கிர காலத்தில் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு பொருளாதார வளம் மேம்படும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம்- சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *