August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அருகே பஞ்சாயத்து தலைவர் ராஜினாமா

1 min read

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.37222221, 0.48155516);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

Panchayat President near Kadayanallur resigns

17.8.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொடிக்குறிச்சி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராததை கண்டித்து தனது ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி நேற்று தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் 40 ஆண்டுகளாக இருந்து வரும் அடிப்படை பிரச்சனைகளான பேருந்து நிறுத்தம், குடிநீர், காட்டு நாயக்கர் சமுதாய ஜாதி சான்றிதழ், பஞ்சமி நிலம் மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட முயற்சிகள் எடுத்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் தீர்க்க முடியவில்லை என்பதால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து எந்த புண்ணியமும் இல்லை. அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. எனவே எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *