June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்

1 min read

Guru Peyarchi Palankal/ Mesham / Aries

21.4.2023
நல்லகுணம் கொண்ட மேஷராசி அன்பர்களே! உங்களிடத்தில் சிறிது முன்கோபம் இருக்கத்தான் செய்யும். எதிலும் முதலில் வரவேண்டும் என்ற ஆவலோடு இருப்பீர்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மீன ராசியில் இருந்தார்.அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடு பலன்களை செய்ய மாட்டார். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும். என்று ஜோதிடத்தில் ஒருவாக்கு உண்டு.அதாவது ராமரின் ஜாதகத்தில்1-ம் இடத்தில் குரு வரும்போது வனவாசம் செல்ல நேரிட்டது என்று கூறுவர். அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதகம் வேறு உங்களுடைய கிரக நிலை வேறு. அவர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். குரு 1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும் அவர் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார்.அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்ற கிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் முக்கிய கிரகமான சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். சனிபகவான்20-12-2023அன்று11-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார்.இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.
நிழல்கிரகமான ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.இதன் மூலம் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.அவர் 8-10-2023 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மீனத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான நிலைதான்.இங்குஅவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார்.ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான கன்னி ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
கேது தற்போது 7-ம் இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். வீண்மன வேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம். 8-10-2023அன்று அவர் 6-ம் இடமான கன்னி ராசிக்கு வருவதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும்,பொருளும் தாராளமாக கிடைக்கும். காரியஅனுகூலம் ஏற்படும். மேலும்அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும். மேலும் நகை-ஆபரணங்கள் வாங்கலாம். நினைத்த காரியம் நிறைவேறும்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
மேறகண்ட நிலையை பார்க்கும்போது குரு பகவானின் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. எனவே உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.அது சிறப்பாக முடியும். செலவு அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அனுகூலம் காணப்- படவில்லை. உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். இருப்பினும் ராகுவின் பின்னோக்கிய 11-ம்இடத்துப்பார்வை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்தாடை அணிகலன் வாங்கலாம் சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். குருவின் பார்வையால் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கை யில் வளம் காணலாம். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
உத்தியோகம்: இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிகமாக போராடியே கோரிக்கைகளைநிறைவேற்ற முடியும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஐ.டி.துறையினர்கள் உன்னத பலன்களை காணலாம். மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபாரம்: பொருள் விரையம் ஏற்படும். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். நமக்கு ஏது எதிரி என்றுஅசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.இருப்பினும் இந்த காலகட்டத்தில் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டாளி -களிடையே ஒற்றுமை ஏற்படும்.
புதிய தொழில் சுமாரான நிலையில் இருக்கும். அதிக முதலீடு தற்போது தேவை இல்லை. பொருள் விரயம் ஏற்படும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர். புதிய பதவி தேடி வரும். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்: ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.போட்டிபந்தயங்ளில் வெற்றி காண்பர்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். ராகுவின் பார்வையால் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பானமகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உற்சாகம் பிறக்கும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம்: உடல் உபாதைகள் குணம் அடையும். உங்களிடம் இருந்த சோர்வு அடியோடு மறையும்.
பரிகாரம்- சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். கேதுவுக்கு பிரத்யேக அர்ச்சனை செய்யலாம். சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சனிபகவான் சாதகமாக இருப்பதால் உற்சாகம் பிறக்கும். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். போட்டியாளர் -களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்- கம் மிகஅதிகமாக இருக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். நவம்பர் மாதத்திற்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம் கூடும். தரகு,கமிஷன் தொழில் பணவரவு இருக்கும். தொழில் அதிபர்களு -க்கு சனியின் பலத்தால் தொழில் சிறப்பாக நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் சிறப்பா இருக்கும்.
கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பு பெறுவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் அனுகூலமான காற்று வீசும். சிறப்பான நிலையை காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், மஞ்சள், கொண்டைக்கடலை,கொள்ளு,துவரை, பழவகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும்.கோழி,ஆடு வளர்ப்பில்நல்ல வருமானத்தை பெறுவர். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.புதியசொத்து வாங்க அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அண்டை வீட்டார்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உஷ்ணம்,தோல்,தொடர்பான நோய் முதலியன பூரண குணம் அடையும்.
பரிகாரம்- நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யலாம். குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஏற்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *