குறும்பலாப்பேரியில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு கூட்டம்
1 min read
Meeting of the Tamil Nadu Nadar Associations Federation at Kurumbalapperi
17.8.2026
தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியில் உள்ள எம்.எஸ்.பி.வி.எல் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் குறும்பலாபேரி இந்து நாடார் கிராம கமிட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களின் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் கொடை விழா காலங்களில் இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் கலை நிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரி நடத்துவதற்கு அரசும் காவல் துறையும் அனுமதி தர வேண்டும் என்றும் கொடை விழாவின் போது பாதுகாப்புக்கு வருகை தருகின்ற காவல் துறையினருக்கு கொடை விழா நடத்துகிறவர்கள் உணவு, ஓய்வு இடம், கழிப்பறை, போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும்
கொடை விழாவுக்கு பாட்டு கச்சேரிக்கு கலை நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வருகை தருவதற்கு காவல் துறை கட்டணம் பெறுவதை முற்றிலும் நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த விழாவிற்கு வருகை தந்த ஊர் தலைவர்கள் பேசும்போது தென்காசி மாவட்டத்தில் அனைத்து நாடார் சமுதாய கிராமங்களுக்கும் தலைமை சங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கோவில் கொடை விழா காலங்களில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் கலை நிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்த அரசிடமும் காவல் துறையிடமும் அனுமதி பெற்று தர வேண்டும் என்று பேசினார்கள்
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் கீழ் இயற்றப்பட்ட ஒலி மாசு ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு விதிகள் 2000 கீழ் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதே பிரிவில் மாநில அரசுகள் குறிப்பிட்ட மதம் அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு இந்த விதிகளில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தளர்வுகளையும் வழங்கலாம் என்றும் கூறியிருக்கிறது.
மேலும் 31. 07.2019 அன்று தமிழ்நாடு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிக சத்தம் ஏற்படுத்தும் ஒலி அமைப்புகளை பயன்படுத்தக் கூடாது என்றும் ஒலி மாசுபாடு ஒழுங்குமுறை கட்டுப்பாடு விதிகள் 2000 இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் சொல்லி இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஒலி மாசுபாடு ஒழுங்குமுறை கட்டுப்பாடு விதிகள் இயற்றப்பட்ட காலத்தில் அதிக சத்தம் வரக்கூடிய கூம்பு வடிவிலான குழாய்கள் பயன்படுத பட்டது.
ஆனால் தற்போது ஒரு பந்தலுக்குள் ஒரு அரங்கத்திற்குள் குறைந்த சத்தத்தோடு கேட்க கூடிய அளவில் ஸ்பீக்கர்கள் ஒலி பெருக்கிகள் வந்துவிட்டது அதனால் நாங்கள் எங்கள் ஊர்களில் நடத்துகின்ற விழாக்களில் எங்களுடைய கோவில் வளாகத்திற்குள் மட்டும் கேட்க கூடிய அளவில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி நள்ளிரவு ஒரு மணி வரையிலும் கலை நிகழ்ச்சிகள் பாட்டு கச்சேரிகள் நடத்த அரசும் காவல்துறையும் அனுமதி தர வேண்டும் என்று பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊர்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள் முடிவில் குறும்பலாபேரி இந்து நாடார் கிராம கமிட்டி தலைவர் நன்றி கூறினார்.