குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவி கொலை; கணவன் வாக்குமூலம்
1 min readHusband killed his wife because he refused to take care of the family – Confession
23/5/2023
குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொன்றேன் என்று கைதான கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
23.5.2023
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் டவுன் முகம்மது அலி தெருவை சேர்ந்த மகபூப்ஜான் என்பவரது மகள் ஹசீனா பேகம் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளம்பெண் கொலை
இந்நிலையில் நேற்று மனைவியுடன் பேட்டை தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார். தொடர்ந்து இம்ரான்கான் டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை கைது செய்த பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனக்கும், எனது மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் என்னிடம் கோபித்து கொண்டு டவுனில் உள்ள தாய் வீட்டிற்கு ஹசீனா பேகம் சென்று விட்டார். அவரை என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு அழைக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போதும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஹசீனா பேகத்தை தர்காவுக்கு வருமாறு அழைத்து சென்றேன். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த என்னுடன் வருமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததுடன் என்னுடன் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரடைந்த நான் எனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினேன். இதில் பலத்த காயம் அடைந்து அங்கேயே உயிரிழந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.