June 11, 2023

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

1 min read

Hysterectomy for the first time at Sengottai Government Hospital

25.5.2023
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

கர்ப்பப் பையில் கட்டி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் என்ற ஊரை சார்ந்த முருகேஸ்வரி என்ற 46 வயது பெண்மணிக்கு சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட கட்டியுடன் கூடிய கர்ப்பப்பை அகற்றம் அறுவை சிகிச்சை முதல் முறையாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று (25.05.23) வெற்றிகரமாக நடந்தேறியது.

தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா MD,GGO அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள நோயாளியின் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு தனது அனுபவத்தின் மூலமாக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் நோயாளியின் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு தனது அனுபவத்தின் மூலமாக இணை இயக்குனர் அவர்களே தன்னை அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் இணைத்துக் கொண்டு அவரதுதலைமையிலான மருத்துவ குழுவினர்களால் அறுவை சிகிச்சை சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. நோயாளி நலமுடன் உள்ளார்.

இது போன்ற வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *