April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

வடகரையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவச மருத்துவ முகாம்

1 min read

Free medical camp through Prime Minister’s Comprehensive Medical Insurance Scheme at North Shore

30.5.2023
தென்காசி மாவட்டம், வடகரை பேரூராட்சி பகுதியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வடகரை பேரூராட்சி பகுதியில் உள்ள உஷைனியா முஸ்லீம் உயர்நிலைப்பபள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது .

தென்காசி மீரான் மருத்துவமனை சார்பில் நடந்த இம்மருத்துவ முகாமை வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவூது தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . இதையொட்டி இமாம் ஷாகுல் ஹமீது இறைவசனம் ஓதினார் . முகாமிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜனாப் அசனார் , தீ.ப.பள்ளிவாசல் செயலாளர் அப்துல் ரகுமான் பொருளாளர் கனி , செய்யது முகம்மது என்ற கருதப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.அப்துல் அஜீஸ் . மீரான் மருத்துவமனை இருதய சர்க்கரை நோய் மருத்துவர் முகம்மது மீரான் தலைமையில் மருத்துவ குழுவினர் இ.சி.ஜி, இரத்த அழுத்த பரிசோதனை , இரத்த சர்க்கரை அளவு, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர் .

மேலும் தேவையானவர்களுக்கு மருந்து , மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது . சிறப்பு சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் மீரான் மருத்துவமனைக்கு இருபது நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர் . இந்த முகாமில் 250 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

இந்த மருத்துவ முகாமில் வடகரை பேரூராட்சி மன்ற உறுப்பினர்ங மைதீன் பாத்து , செய்யது அலி , முகம்மது வவுத் உள்ளிட்டோர கலந்து கொண்டனர் .இந்த மருந்து முகாமிற்கான ஏற்பாடுகளை வடகரை தீ.ப.பள்ளிவாசல் நிரவாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.