April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட தர ஆலோசகர் மற்றும் நிர்வாக உதவியாளர் தேர்வு

1 min read

Tenkasi District Quality Advisor and Administrative Assistant Exam

9.6.2023
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்ட தர ஆலோசகர், மற்றும் நிரல் நிர்வாக உதவியாளர் பணியிடங் களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் தென்காசியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்ட தர ஆலோசகர் மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

  1. மாவட்ட தர ஆலோசகர் பணியிடம் பல் மருத்துவம்/ஆயுஷ்/நர்சிங்/சமூக அறிவியல்/வாழ்க்கை அறிவியல் பட்டப்படிப்புடன் மருத்துவமனை நிர்வாகம்/பொது சுகாதாரம்/சுகாதார மேலாண்மை/தொற்றுநோயியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (முழுநேரம் அல்லது அதற்கு இணையான 2 வருட சுகாதார நிர்வாக அனுபவத்துடன் விரும்பத்தக்க தகுதி/பயிற்சி/தரம்/NABH/ISO9001/2008/Six Sigma /Lcan/ Kaizen ஆகியவற்றில் அனுபவம் மற்றும் சுகாதார துறையில் முந்தைய பணி அனுபவம்.
  2. நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் அங்கீகரிக்கப் பட்ட பட்டதாரி பட்டம் மற்றும் ஆளு ஆபீஸ் பேக்கேஜில் முன் அனுபவத்துடன் அலுவலக நிர்வாகத்தில் ஒரு வருட அனுபவம் மற்றும் சுகாதார திட்டம்/தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகியவற்றின் ஆதரவை வழங்குதல், கணக்கியல் அறிவு மற்றும் வரைவுதிறன் தேவை. மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/reeruitment/-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் 15.06.2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), தென்காசி 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.