June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை பள்ளியை சீரமைக்க கலெக்டரிடம் எம்.எல்.ஏ. மனு

1 min read

MLA asks Collector to repair exploitative school. Petition

21.6.2023
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரனிடம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ், பழனி நாடார் கோரிக்கை மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1050 மாணவ, மாணவிகள், கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் ஐந்து வகுப்பறையின் தரைத்தளம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் மாணவ, மாணவியர்களின் கால்களில் காயம் ஏற்படுவதாக தலைமை ஆசிரியர் என்னிடம் அளித்த புகாரின் பேரில் நான் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தேன்.
மாணவ, மாணவிகளின் நலன் கருதி பழுதடைந்த வகுப்பறையை ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்வதாகவும், மேலும் எனது தென்காசி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் வர்ணம் பூசாமல் உள்ளது. எனவே அனைத்து பள்ளி கட்டிடங்களுக்கும் விரைவாக வர்ணம் பூச ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துதுணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், காஜாமைதீன், பொருளாளர் ஈஸ்வரன், மற்றும் சண்முகவேல், சந்தோஷ் ஜார்ஜ், சிவாஜி மன்றம் என்.கணேசன் , சித்திக், கோவிந்தராஜுலு, பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *