June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இரவணசமுத்திரம் பகுதியில் உலக யோகா தினம்

1 min read

World Yoga Day in Ravanasamutram region

21.6.2023
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் பகுதியில் யோகா தினத்தை முன்னிட்டு மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளி மாணவி விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளி மாணவி விழிப்புணர்வு யோகாவில் ஈடுப்பட்டார் . பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் தவறான பாதைகளில் சென்றால் அவர்களை நல்நெறி படுத்தும் வண்ணம் உடல் ஆரோக்கியம் பெற்று கல்வி மற்றும் பொதுநலனில் அக்கரைகளை மேற்கொள்ளும் விதம் யோகா தினத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரிகளில் கொண்டாட வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் சுற்றறிக்கை அனுப்பி யோகாவை சிறப்பித்து கொண்டுள்ளது .

இதை வரவேற்கும் வகையில் இரணசமுத்திரம் வேளாண் பகுதியில் வைத்து 9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி கடையம் அடுத்து இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஷாஜிதா ஜைனப் என்ற மாணவி நாட்டில் மழை செழித்து விவசாயம் பெருக வலியுறுத்தி தனது கைகளில் நெல் நாற்றுக்களை வைத்து பல்வேறு யோகாசனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த ஷாஜிதா பல்வேறு யோகா போட்டிகள் மட்டுமில்லாமல் யோகாசனம் சம்பந்தமாக யுனிவர்சல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றும் யோகா, ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் குற்றாலம் செய்யது பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மிஸ்பா நூருல் ஹபிபாவினுடைய உடன் பிறந்த சகோதரி ஆவார்.

இந்நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் குரு கண்ணன், பாரதீய ஜனதா கட்சி கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய விவசாய அணி பொறுப்பாளர் திப்பணம்பட்டி அருணாசலப்பாண்டி மற்றும் விவசாய பணியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டு ஷாஜிதாவை பாராட்டினர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *