June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவள்ளூர் அருகே ஊஞ்சல் ஆடியபோது கழுத்து இறுக்கி சிறுவன் சாவு

1 min read

A boy died of strangulation while swinging near Tiruvallur

21.6.2023
திருவள்ளூர் அருகே ஊஞ்சல் ஆடியபோது சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ஊஞ்சல்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் எலக்ட்ரீசியன். இவரது மகன் தமிழ் மாறன்(வயது 8).
தமிழ்மாறன் காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்த ஊஞ்சலில் சேலையை தனது கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவரது சேலை கழுத்தை பலமாக இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றார்.
சிறுவனின் அலறலைக் கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து சிறுவனை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தமிழ் மாறன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *