திருச்சி அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
1 min read5 killed in an accident where a car collided with a government bus near Trichy
25.6.2023
திருச்சி மணப்பாறை அருகே அரசு பஸ்சும், காரும் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.