கடையம் பகுதியில் இரவு நேர மின் வெட்டால் பொதுமக்கள் அவதி
1 min read
Residents suffer due to night-time power cut in Katayam area
7.7.2023
கடையம் பகுதியில் ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது. இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.
மின்வெட்டு
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்ராப்பகுதியான பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், மந்தியூர், நரையப்பபுரம், அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், ஒட்டல் நடத்துபவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த மின்வெட்டால் இரவு நேரங்களில் வீடுகளில் பெண்கள் சமைக்கவும் மற்றும் தூங்கும்போது மின்விசிறியை இயக்க முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் போதிய மின் பணியாளர்களை நியமிக்கவும், மின் வெட்டை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.