June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் வட்டார குழந்தைகள் நலவாழ்வு உறுப்பினராக ஆதிமூலம் நியமனம்

1 min read

Appointed by Adi Moolam as Member of Kadayam District Child Welfare

7.7.2023
கடையம் வட்டார குழந்தைகள் நலவாழ்வு அலுவல் சாரா உறுப்பினராக ஆதிமூலம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நலவாழ்வு உறுப்பினர்

தென்காசி மாவட்டம் கடையம் வட்டார குழந்தைகள் நலவாழ்வு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 12 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். வட்டார வளர்ச்சி அதிகாரி, ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் உள்ள அரசு அதிகாரிகள் 11 பேர் உள்ளனர். ஆனாலர் அலுவல் சாரா உறுப்பினராக ஆதிமூலம் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான சான்று அவருக்கு வழங்கப்பட்டது.
கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் இவரை நியமித்துள்ளார்.
ஆதிமூலம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
கடையம் வட்டாரத்தில் குழந்தைகள் நலன் பற்றி இந்த உறுப்பினர்கள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா? நோய் இன்றி உள்ளார்களா என்பது பற்றி ஆய்வு நடத்தி பரிந்துரை செய்வார்கள். மேலும் பள்ளிக்கூடம் செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கூடம் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக இந்த உறுப்பினர்களின் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *