June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மேலகரம் முனி குறுக்கன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்

1 min read

Melakaram Arulmiku Srimuni Krukan Shasta Temple Kumbabhishekam

15.7.2023
குற்றாலம் அருகே உள்ள மேலகரம்முனி குறுக்கன் சாஸ்தா திருக்கோவில் ஜீர்ணோதாரண புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாஸ்தா கோவில்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே மேலகரம் மோர்மடம் அருகில் உள்ள குளத்துக்கரையில் அமைந்துள்ள முனி குறுக்கன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. மாலையில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தொடர்ந்து 10.05 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து பூர்ண புஷ்பகலா அம்பாள் சமேத ஸ்ரீ முனி குறுக்கன் சாஸ்தாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தையா பண்டாரம் குடும்பத்தினர்கள் மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *