June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

1 min read

Grand welcome for Prime Minister Modi in UAE

15.7.2023
பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அமீரகம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. இது காண்போரை வியக்க வைத்தது. இதைத்தவிர, பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் படத்தின் கீழ் மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு நல்வரவு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *