மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா முதலிடம்
1 min read
India leads the world in motorcycle usage
26.7.2023
மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.
மோட்டார் சைக்கிள்
மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. சாலை போக்குவரத்தின் வருடாந்திர புத்தகத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 32.63 கோடி வாகனங்கள் இருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இருச்சக்கர வாகனங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜூலை மத்தி வரை மொத்த எண்ணிக்கை 34.8 கோடியாக இருக்கிறது.
இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது. கார்களின் எண்ணிக்கைகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் முதல் 3 இடங்களில் உள்ளன.