June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

1 min read

Congress candlelight demonstration in Tenkasi

27.7.2023
தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் தலைமையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி எம்.எல்.ஏ.வுமான பழனி நாடார் தலைமையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளான வைகுண்ட ராஜா, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன் உட்பட திரளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *