கேரளாவைப் போல் தமிழகத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
1 min read
Panchayat Heads Association resolution to give monthly salary to Panchayat Heads in Tamil Nadu like Kerala
27.7.2023
கேரளா மாநிலத்தை போன்று தமிழகத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் குத்துக்கல்வலசை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கோவிந்தப்பேரி டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் ராஜ்குமார், நீதிராஜன், விசு வாசம், ராதா பரசுராமன், வேலுச்சாமி, முத்தையா, சந்திரசேகர், அமுதா ரமணிபாய் மற்றும் பூமிநாத், அய்யலுசாமி, அன்பு ராணி, பூமாரியப்பன், செய்யது இப்ராகிம், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் குத்துக்கல்வலசை சத்யராஜ் அனைவரையும் வர வேற்றார். பெரிய பிள்ளை வலசை பொறியா ளர் வேலுச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி மற்றும் ஒருங்கிணைபாளர் ஆரணி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப் படும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப் பாட்டில் செயல்படுத்த வேண்டும். ஊராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மட்டுமே நடைபெற வேண்டும். கேரள மாநிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கு மாத ஊதியம் வழங்குவது போல் தமிழகத்திலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் நெல்கட்டும் செவல் பாண்டியராஜன், சங்கனாப்பேரி சமுத்திரவேல், உள்ளாறு சகுந்தலா, நகரம் அமுதா, நாராயணபுரம் மாரியம்மாள், ஆண்டார் குளம் அந்தோணியம்மாள், குலசேகரமங்கலம் வெள்ளத்துரை, நடுவக் குறிச்சி மேஜர் முத்துப் பாண்டியன், முள்ளிகுளம் முருகன், கிளாங்காடு சந்திரசேகரன் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏராளமான பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.