மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்
1 min read
An Indian teenager holds the Guinness World Record for making the world’s smallest spoon
18/8/2023
உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி இந்திய வாலிபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சாதனை
சிலர் ஏதாவது ஒரு விசத்தில் உலக சாதனைகளையும் படைக்கின்றனர். குறிப்பாக சமீபகாலமாக இடைவிடாத சாகசம், நீண்ட நேரம் சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிலர் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில், பேனாவின் நுனியை விட மிகச்சிறிய மரக்கரண்டியை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார் பீகாரை சேர்ந்த சஷிகாந்த் பிரஜாபதி என்ற வாலிபர்.
கைவினை பொருட்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவரான இவர் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூனை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்ய பல முறை முயற்சி செய்த சஷிகாந்த் 10 முறை தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் தனது விடாமுயற்சியால் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய கலைஞரான நவ்ரதன் பிரஜாபதி மூர்த்திகர் உருவாக்கிய 2 மில்லி மீட்டர் அளவில் மர ஸ்பூன் தான் உலகின் மிகச்சிறிய ஸ்பூன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது. தற்போது அந்த சாதனையை சஷிகாந்த் முறியடித்துள்ளார். அவர் இந்த ஸ்பூனை தனித்தனி பாகங்களாக செய்யாமல் ஒரே மரத்துண்டில் செய்து அசத்தி உள்ளார்.
==
பெங்களூரு நகரில் ரூ.6-க்கு ஆட்டோ சவாரி சென்ற பெண்
டுவிட்டர் பதிவு வைரல்
பெங்களூரு,ஆக.19-
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு நகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அங்கு பீக்அவர்ஸ் எனப்படும் அவசர நேரங்களில் பயணம் செய்வது சவாலான விஷயமாகவே மாறி விட்டது.
அதே போல அங்கு ஆட்டோ, கார் சவாரிக்கு அதிக கட்டணங்களும் பெறப்படுவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது உண்டு. ஆனால் பெங்களூரு பெண் ஒருவர் வெறும் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண் ஊபர் ஆட்டோ சவாரியில் வண்டியை முன்பதிவு செய்துள்ளார். அப்போது விளம்பர குறியீட்டை உள்ளிடும் போது அவருக்கு வெறும் 6 ரூபாய்க்கு சேவைகளை பெற முடிந்துள்ளது. இது சவாரிக்கான அசல் தொகை ரூ.46.24-ஐ விட மிகவும் குறைவாகும்.
இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.