மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை
1 min read
Resurgence of violence in Manipur; 3 youths shot dead
18/8/2023
மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
மீண்டும் வன்முறை
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று அதிகாலையில் கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையால் மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.