June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை யூனியன் தலைவரின் கணவர் தற்கொலை

1 min read

Red Fort Union Leader’s Husband Commits Suicide

21/8/2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மன் திருமலை செல்வியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யூனியன் தலைவர்

செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் திருமலைச்செல்வி இவரது கணவர் மோகன்ராஜ் (வயது 40) கணவன் மனைவி இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மோகன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த புலியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *