June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மணமேடை வரை வந்த பின் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்

1 min read
Seithi Saral featured Image

The bride stopped the wedding after reaching the wedding venue near Tenkasi

21/8/2023
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள வீராணம் பகுதியில் மணமேடை வரை வந்த மணப்பெண், தனது திருமணத்தை திடீரென நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்பு தூரை அடுத்துள்ள வீராணம் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும். நெல்லை நயினார்குளத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பாக திரு மண நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த சனிக்கிழமை மணமகள் அழைப்பு நடந்தது. நேற்றுமுன்தினம் காலை முகூர்த்த வேளை யில் பெண்ணுக்கு அலங்காரம் நடந்தது. அலங்காரம் முடிந்த நிலையில், மணமேடைக்கு வர பெண் மறுப்பு தெரி வித்தார்.அப்போது அவர் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அதனால் இந்த திருமணம் வேண்டாம் எனவும் கூறி மறுப்பு தெரிவித்தார். இதனால் கல்யாண நிகழ்ச்சி போர்க்களமானது.

இதுகுறித்து வீரகேரளம் புதூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியவர்கள் முன் னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண அறிவுறுத்தினர்.
ஆனாலும் மணப்பெண் பிடிவாதம் செய்ததால் திருமணம் தடைபட்டது. அந்த மணப்பெண் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவரை காதலித்ததா கவும்,திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த அவரது காதலர், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால், திருமணம் தடைபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மணமேடை வரை வந்த மணப்பெண், திடீரென திருமணத்தை நிறுத்தி வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *