குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்க தடை
1 min read
Flooding at Koorala Falls – Bathing Prohibited
4.9.2023
குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடியபெய்த சாரல் மழை இன்று காலையிலும் நீடித்தது.
குற்றாலம் மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப் பாய்கிறது.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மெயின் அருவி ஐந்தருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை வீடியோ எடுத்தும் செல்பி எடுத்தும் ஆறுதல் அடைந்தனர்.
தென்காசி சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை நீடித்து வருவதால் இப்பகுதி முழுவதும் குளுகுளு நிலைமை ஏற்பட்டுள்ளது .