இலஞ்சி குமாரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
1 min read
New chariot race at Ilanji Kumarar temple
4.9.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற இலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலில் பழுதடைந்த நிலையில் புதிய தேர் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு உபயதாரர் டி ராஜேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் மூலம் அதற்கான பணிகள் நடைபெற்று பல லட்ச ரூபாய் செலவில் புதிதாக தேர் அமைக்கப் பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
இலஞ்சி குமாரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் விக்னேஸ்வர பூஜை, புணயா வாசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலையில் சங்கல்பம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாரதனை நிகழ்ச்சிகள் பூஜைகள் ஆகியவற்றை சுந்தரம் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து கலசங்கள் வலம் வந்து ரத அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது அதன் பின் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் பஞ்சவாத்தியங்கள் முழங்க புதிய தேர் நிலையத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி கோவில் நிர்வாக அதிகாரி சுசீலா ராணி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் குற்றாலம் தொழிலதிபர் டி. ராஜேந்திரன் அருணாசலம் ஆகியோர் புதிய தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பிய படி பச்சவாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 11:30 மணிக்கு மீண்டும் இளையத்தை வந்து அடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் முசேக் அப்துல்லா, துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் குற்றாலம் பா.துரை (எ) இராமையா, தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம். திவான் ஒலி , தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், பேரூர் திமுக செயலாளர் இலஞ்சி முத்தையா, பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், சாம்பவர் வடகரை கோ.மாறன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தென்காசி முத்துக்குமார், இலஞ்சி அன்னையா பாண்டியன், திருவிலஞ்சிக்குமரன், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கி முத்து, இலஞ்சி மாரியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலஞ்சி குமாரர் கோவில் உதவி ஆணையர் கோமதி, செயல் அலுவலர் சுசீலா ராணி, தக்கார் முருகன், ஆய்வர் சரவணகுமார், மற்றும் உபயதாரர்கள் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.