புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது
1 min read
A special session began in the new Parliament building
19/9/2023
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று, பழைய கட்டிடத்தில் தொடங்கியது.
இன்று, முன்தினம் 75 ஆண்டு கால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இன்று, காலை பிரதமர் மோடி எம்.பி.க்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பழைய கட்டிடத்தின் மையப்பகுதியில் எம்.பி.களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பழைய கட்டிடத்திற்கு சம்விதன் சதன் என பெயர் சூட்ட வேண்டும் என பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து பழைய கட்டிடத்தில் இருந்து பிராமாண்டமான புதிய கட்டிடத்திற்கு எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நடந்து சென்றார்.
புதிய கட்டிடம் வந்தடைந்ததும், உறுப்பினர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அதன்பின் தேசியகீதம் இசைக்கப்பட்டது. சபாநாயகர் முதலில் பேசினார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார்.