June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

1 min read

2 arrested for selling ganja in Tenkasi

10.10.2023
தென்காசி அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை பகுதியில் இளைஞர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தென்காசி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குத்துக்கல்வலசை ராமர் கோவில் தெருவை சேர்ந்த கரன் (வயது22), அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (43) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது கைது செய்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *